12 வயதில் பெற்றோரை துறந்து துறவறம் சென்ற சிறுமி!

 

12 வயதில் பெற்றோரை துறந்து துறவறம் சென்ற சிறுமி!

ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் துறவறம் சென்றிருப்பது  வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத்: ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் துறவறம் சென்றிருப்பது  வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

jain

குழந்தைகள், இளம் வயதினர், முதியவர்கள் என யார் வேண்டுமானாலும் துறவறம் மேற்கொள்ளலாம் என்று ஜெயின் சமூகத்தின் கூற்று சொல்கிறது. துறவறம் பூண்டவர்கள், வீட்டைத் துறந்து வாழ வேண்டும். அவர்களுக்கான உணவை அவர்களே யாசகமாகப் பெற்று உண்ண  வேண்டும். எங்குச் சென்றாலும் நடந்தே செல்ல வேண்டும். அதே போல் அவர்களின் பொருட்களின் சுமையை அவர்களே தூக்கிச் செல்ல வேண்டும். இதில் உச்சக்கட்டமாகத் தலை முடியை கைகளாலையே நீக்க வேண்டும். இப்படை ஜெயின் சமூகத்தில் துறவறம் பூண்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் அதிகம். ஆனால்  இதைப் பலரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு வருகின்றனர். 

jain

அந்த வகையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 12 வயதேயான சிறுமி குஷி  துறவறம் சென்றுள்ளார். இதற்கு அவரின் பெற்றோர் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்த நிலையில் அதற்கான விழா  வெகு விமர்சையாக நடந்தது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள சிறுமி குஷி, ‘இந்த உலகில் நாம் அனுபவிக்கும் இன்பங்கள் யாவும் நிலையானவை அல்ல. அமைதியையும் முக்தியையும் அடைய எளிமையான வாழ்வே ஒரே தீர்வு. அதனால் நான் தீக்‌ஷை பெற விரும்புகிறேன்’ என்றார்.

kushi

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  குஷியின் தந்தை வினித் ஷா, “இது போன்று எல்லா குழந்தைகளுக்கும் சாதாரணமாகத் தோன்றிவிடாது. எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. அவள் மருத்துவராக வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் அவள் துறவறத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.