’12 லட்சம் ரூபாய் கடனுக்கு வட்டி மட்டுமே 16 லட்சமாம்’ : கந்துவட்டி கும்பலால் போலீசில் தஞ்சம் புகுந்த பெண்!

 

’12 லட்சம் ரூபாய்  கடனுக்கு வட்டி மட்டுமே 16 லட்சமாம்’ : கந்துவட்டி கும்பலால் போலீசில் தஞ்சம் புகுந்த பெண்!

இதுவரை  ரூபாய் 16 லட்சம் திருப்பி கொடுத்தும், அந்த தொகை வெறும் வட்டி தான் ரூ.12 லட்சம் அசலை திருப்பி தரவேண்டும்

திருப்பூர்: ரூ. 12 லட்சம் பணம் கேட்டு  கந்துவட்டி கும்பல் கொலை மிரட்டல் விடுப்பதாகப் பெண் ஒருவர் திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

subathara

திருப்பூர் மன்னரைப் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்சங்கரும் அவரது மனைவி சுபத்ராவும்   பின்னலாடைத் தொழில் சார்ந்த தையலக கடை நடத்தி வருகின்றனர். நிறுவனத்தை மேம்படுத்த அக்ஷயா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வேலுச்சாமியிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.12 லட்சம் கடன் வாங்கியுள்ளனர்.

velusamy

ஆனால் இதுவரை  ரூபாய் 16 லட்சம் திருப்பி கொடுத்தும், அந்த தொகை வெறும் வட்டி தான் ரூ.12 லட்சம் அசலை திருப்பி தரவேண்டும் என்று கூறி மிரட்டி வந்துள்ளார். மேலும் வேலுச்சாமி அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசி ஒரே நாளில் பணத்தைத் திருப்பி கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். 

subathra

இந்நிலையில் இதுகுறித்து  சுபத்ரா, திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். அதில் தனது குடும்பத்திற்குக் கொலை மிரட்டல் விடுக்கும் கந்துவட்டி கும்பலிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்ததுடன் வேலுச்சாமி மிரட்டும் சிசிடிவி காட்சிகள், செல்பேசியில் பதிவு ஆகிய ஆதாரங்களையும் அளித்துள்ளார்.