கோபி: 11 திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை போட்ட அமைச்சர் செங்கோட்டையன்

 

கோபி: 11 திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை போட்ட அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம்,
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ரூ.95.97 இலட்சம் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப்பணிகளுக்கு பூமி பூஜையிட்டும், முடிவுற்ற திட்டப் பணியினை திறந்தும் வைத்தார்.

கோபி: 11 திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை போட்ட அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் இன்று (17.09.2020) பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் 11 புதிய திட்டப்பணிகளுக்கு ரூ.95.97 இலட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜையிட்டும், முடிவுற்ற திட்ட பணியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்தும் வைத்தார்.

கோபி: 11 திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை போட்ட அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம்,
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்ட ஊராட்சிகளில் ரூ.95.97 இலட்சம் மதிப்பீட்டில் வரப்பாளையம் – ஓலப்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும், வரப்பாளையம் – கோரமடைப்புதூர் ரோடு மற்றும் வரப்பாளையம் செந்துண்டு சாலை அமைக்கும் பணிக்கும், வரப்பாளையம் – சந்தைபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும், காவிலிபாளையம் – தேவம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் தார்சாலை மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும், காவிலிபாளையம் – ராஜீவ்நகர் ஆதிதிராவிடர்
காலனியில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கும், காவிலிபாளையம் – கோப்பம்பாளையம் கே.வி.கே ஆதிராவிடர் காலனியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கும், காராப்பாடி – மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கும், காரப்பாடி – வி.கே.சி. நகர் ஆதி திராவிடர் காலனியில் கான்கிரீட் தளம் மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கும், காராப்பாடி – வகுத்துகவுண்டன்புதூர் வீதியில் பேவர் பிளாக் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையிட்டு, வரப்பாளையம் ஊராட்சி, கொண்டையம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள மேல்நீர்; தேக்க தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

கோபி: 11 திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை போட்ட அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் தலைவர் கே.கே.காளியப்பன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.