கிசான் முறைகேடு: கடலூர் மாவட்டத்தில் ரூ.11 கோடி வசூல்!

 

கிசான் முறைகேடு: கடலூர் மாவட்டத்தில் ரூ.11 கோடி வசூல்!

கடலூர் மாவட்டத்தில், கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து ரூ.11 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டமான கிசானில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதோர் பயன்பெற்றிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. சுமார் ரூ.110 கோடி வரையில் இந்த திட்டத்தில் மோசடி நடந்திருப்பதாக வேளாண்துறை செயலாளர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கிசான் முறைகேடு: கடலூர் மாவட்டத்தில் ரூ.11 கோடி வசூல்!

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ரூ.11 கோடி பணம் வசூலிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அம்மாவட்டத்தில் மொத்தமாக ரூ.14.26 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகவும் இது தொடர்பாக சிபிசிஐடி 13 பேரை கைது செய்துள்ளதாகவும் பணத்தை திரும்ப செலுத்தாமல் இருப்பவர்களுக்கு சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணத்தை திரும்ப செலுத்துவதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருப்பதாகவும் பணத்தை வசூல் செய்யும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.