முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்த யாசகர் பூல்பாண்டியன்

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்த யாசகர் பூல்பாண்டியன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு ஊரைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன்( வயது 70). இவர் குடும்பத்தை விட்டு வெளியேறி ஊர் ஊராக சென்று யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார். யாசகம் பெற்ற பணத்தில் தான் சாப்பிடுவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருக்காமல் பொது சேவைகளையும் செய்து வருகிறார்.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்த யாசகர் பூல்பாண்டியன்

ஒவ்வொரு ஊரிலும் யாசகம் பெற்றதை வைத்து அந்தந்த ஊரில் உள்ள பள்ளிகளுக்கு குடிநீரை சுத்திகரிக்கும் இயந்திரம் வாங்கிக் கொடுத்தல், மேஜை, நாற்காலி உள்ளிட்ட உதவிகள் செய்து கொடுத்தல், சிசிடிவி கேமரா அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துவந்தார்.

கடந்த சில வருடங்களாக மதுரையிலேயே அதிக காலம் தங்கியிருந்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தின்போது கொரோனா நிவாரண நிதிக்காக முப்பது முறைக்கு மேலாக மதுரை ஆட்சியரிடம் மூன்று இலட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்திருக்கிறார்.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்த யாசகர் பூல்பாண்டியன்

கொரோனா நிவாரண நிதிக்காக ஒவ்வொரு முறையும் அவர் 10,000 ரூபாய் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். யாசகம் பெற்ற பணத்தில் ஒருமுறை பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததோடு அல்லாமல் முப்பது முறைக்கு மேல் அப்படி கொடுத்ததால் மதுரை ஆட்சியர் அவரை அழைத்து கவுரவித்தார். அப்போதைய அமைச்சர் உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோரும் பூல் பாண்டியனின் கொடைத் தன்மையை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்த யாசகர் பூல்பாண்டியன்

பாண்டியனின் இந்த பொதுச்சேவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் தெரிய வந்ததையடுத்து அவரை உலக தமிழர்கள் அனைவரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு யாசகம் மூலம் பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். நாகர்கோவில் தோவாளையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மூலம் இந்த 10,000 ரூபாய் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார்.