ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!

 

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!

ஆண்டிப்பட்டி அருகே அபிஷேக் என்ற 10 ஆம் வகுப்பு மாணவர் ஆன்லைன் மூலம் பாடம் படித்துவந்த நிலையில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் இதுவரை திறக்கப்படவில்லை. இதனிடையே பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல் கல்லூரிகளை பொருத்தவரையில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று அடுத்த ஆண்டிற்கு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இருப்பினும் வீடுகளில் முடங்கியுள்ள பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதனால் மாணவர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பில் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை!

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மறவபட்டியை சேர்ந்த அபிஷேக் என்ற பத்தாம் வகுப்பு மாணவன்ஆன்லைன் மூலம் பாடம் படித்து வந்தார். இந்நிலையில் பாடம் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து இன்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணையும் நடத்திவருகின்றனர்.