10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

 

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 23ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 9 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்ய தனியாக குழு அமைக்கப்பட்டது. அதன்படி, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வரும் 23 ஆம் தேதி காலை 11 மணி முதல் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் பிறந்த தேதி, பதிவு எண்ணை உள்ளிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதள பக்கத்தில், பிறந்த தேதி, பதிவு எண்ணைப் பதிவிட்டு மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.