“10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்” மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – அரசாணை வெளியீடு!

 

“10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்” மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – அரசாணை வெளியீடு!

10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள் எழுத இருந்த மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

“10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்” மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – அரசாணை வெளியீடு!

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் நடைபெற உள்ள 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தற்போது நிலவி வரும் நோய் தொற்று காரணமாக தேர்வு எழுதுவதில் விலக்கு அளித்து ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.நடப்பு ஆண்டின் 2020 -21 ஆம் கல்வியாண்டில் நமது மாநிலத்தில் பரவி வரும் நோய் தொற்று காரணமாக 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வேண்டிய அனைவருக்கும் விலக்கு அளித்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது என்றும் ,இதில் மாற்று திறனாளிகள் நலத் துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர் மேலும் தனித்தேர்வர்களாக 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தொகை தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும், இத்துணை தேர்வுகளை மாற்றுத்திறனாளி மாணவர்களும் எழுத உள்ளனர் என்றும், தற்போது நிலவிவரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இத்தகைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்று ஏற்கனவே நடப்பாண்டில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற நடைபெறும் 10 மற்றும் 11-ம் வகுப்பு துணை தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி தனித்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குனர் அரசை கேட்டுக் கொண்டார்.

“10 மற்றும் 11 ஆம் வகுப்பு துணைத் தேர்வுகள்” மாற்றுத் திறனாளி மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – அரசாணை வெளியீடு!

இந்நிலையில் இக்கருத்தை பரிசீலித்து நோய் தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துறை தேர்வுகளை எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் இத்தேர்வில் இருந்து விலக்கு அளித்து தேர்ச்சி பெற்றதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகளை எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் இத்தேர்வினை எழுதலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.