அபராத தொகை 10 கோடியை செலுத்த அனுமதி கோரும் சசிகலா!

 

அபராத தொகை 10 கோடியை செலுத்த அனுமதி கோரும் சசிகலா!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, அபராத தொகை 10 கோடியை செலுத்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேலும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

அபராத தொகை 10 கோடியை செலுத்த அனுமதி கோரும் சசிகலா!

2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி முதல் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா சிறைக்கு வந்து 3 ஆண்டுகள் முடிவடைகிறது.


இந்நிலையில் , 10 கோடி அபராத தொகையை கட்டினால் வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி அன்று சசிகலாவை விடுதலை செய்ய வாய்ப்பு இருப்பதாக கர்நாடக சிறைத்துறை தெரிவித்திருந்தது.

இதையடுத்து அபாரதத்தொகை 10 கோடியை சுதாகரன் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார். சுதாகரன் அபராத தொகையை செலுத்திய நிலையில், சசிகலா அபராத தொகை 10 கோடியை செலுத்த அனுமதி கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.