இரண்டு காரணங்களுக்காக ஜனவரி 10-ஐ இலக்கு வைத்த ரஜினி!

 

இரண்டு காரணங்களுக்காக ஜனவரி 10-ஐ இலக்கு வைத்த ரஜினி!

இந்நேரம் எல்லாம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்திருக்க வேண்டிய ’அண்ணாத்த’ படம், கொரொனா இடைவேளையினால், இன்னும் 40 சதவிகித வேலைகளை பாக்கி வைத்திருக்கிறது.

இன்னும் 10 நாட்கள் கழித்து அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட இருப்பதால் அதற்குள் படப்பிடிப்பை முடிக்கச்சொல்லி ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கிறார் ரஜினி. அதுமட்டுமில்லாமல் டப்பிங்க் பணிகளும் முடிந்தால்தான் தன்னோட வேலை பினிசிங் ஆகும் என்பதால், ஜனவரி 10ம் தேதிக்குள் டப்பிங் வேலைகளையும் முடித்துக்கொள்ளுமாறு படக்குழுவுக்கு சொல்லிவிட்டார் ரஜினி.

இரண்டு காரணங்களுக்காக ஜனவரி 10-ஐ இலக்கு வைத்த ரஜினி!

தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலினும், கமலும் தீவிரமாக இறங்கிவிட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமியும் இன்று முதல் களம் இறங்குகிறார். இந்த நிலையில் தான் இன்னும் கட்சி அறிவிப்பையே செய்யாமல் இருப்பதால் நெருக்கடியை உணர்ந்துதான், டிசம்பர்31 கட்சியை அறிவித்தாலும், பிரச்சாரம் முக்கியமாயிற்றே. அதனால்தான் படத்தை 10ம் தேதிக்குள் முடித்துக்கொடுத்துவிட முடிவெடுத்திருக்கிறார்.

இரண்டு காரணங்களுக்காக ஜனவரி 10-ஐ இலக்கு வைத்த ரஜினி!

ஜனவரி 10க்குள் அவர் படத்தை முடித்துக்கொடுப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டும் அல்ல. 100கோடி சம்பளத்தில் 30 கோடிதான் அட்வான்சாக வாங்கி இருக்கிறார் ரஜினி. மீதம் 70 கோடியை படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு வாங்கிகொள்வதாக அக்ரிமெண்ட். படத்தில் நடித்தால் மட்டும் வேலை முடிந்தாதாக அர்த்தம் கிடையாது. டப்பிங் பணிகளூம் முடிந்தால்தான் ரஜினியோட வேலை பூர்த்தியாகும். அதனால்தான் ஜனவரி 10க்குள் படத்தை முடித்துவிட ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார்.