10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி!

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி!

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினிகாந்த் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றதால்தான் பிழைத்து வந்தார். அதனால்தான், விஜயகாந்துக்கும் அந்த மருத்துவமனையை பரிந்துரைத்தார் ரஜினி.

2011க்கு பிறகு சரியாக 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது 2021ல் மீண்டும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவுள்ளார் ரஜினி என்று தகவல்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி!

உடல் சோர்வு காரணமாக ஐதராபாத் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ரஜினி டிஸ்சார்ஜ் ஆகி வந்து ஓய்வெடுத்து வருகிறார். ஆனால், அவர் கட்சி தொடங்கப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால், கிண்டல் செய்வோர் ஒருபுறமிருக்க, அவரது ரசிகர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மன உளைச்சலில் ரசிகர் தற்கொலை என்ற அதிர்ச்சி செய்திகளும் வருகின்றன. இதையெல்லாம் பார்த்து ரஜினிக்கு மன சோர்வு அதிகம் ஏற்பட்டிருக்கிறதாம்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி!

இதனால் அவரின் உடல்சோர்வுக்கு சிகிச்சையும், மன சோர்வுக்கு ஓய்வும் அளிக்க முடிவு எடுத்துள்ளார்களாம் குடும்பத்தினர். சிங்கப்பூர் சிகிச்சைக்கு பின்னர் அமெரிக்கா சென்று பரிசோதனைகளை செய்துகொண்ட ரஜினிகாந்த், அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்து சில நாட்கள் ஓய்வெடுத்தார்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி!

அதுபோலவே, தற்போதும் ரஜினியை அமெரிக்கா அழைத்துச்செல்ல முடிவெடுத்துள்ளனர் அவரது குடும்பத்தினர். ஆனால், மீண்டும் கொரோனா வேகம் எடுத்திருப்பதால் அங்கு செல்வதில் சிக்கல் இருப்பதை உணர்ந்து, ரஜினியை சிங்கப்பூர் அழைத்து சென்று மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிங்கப்பூரிலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்து மனச்சோர்வு நீங்க ஓய்வெடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்.

10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் செல்லும் ரஜினி!