‘உணவு, ஓய்வு இல்லை’.. 108 ஆம்புலன்ஸை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்!

 

‘உணவு, ஓய்வு இல்லை’.. 108 ஆம்புலன்ஸை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை உலுக்கி எடுத்து வருகிறது. நாள் தோறும் நூற்றுக் கணக்கான மக்கள் இந்த கொடிய வகை வைரசால் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் உயிரிழப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாளுக்கு நாள் கொரோனாவல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் பாதிப்பு பன்மடங்கு அதிகமாகி இருப்பதால், பிற மாவட்டங்களில் இருந்து டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸ் இயக்கப்பட்டு வருகிறது.

‘உணவு, ஓய்வு இல்லை’.. 108 ஆம்புலன்ஸை இயக்க மறுத்து ஊழியர்கள் போராட்டம்!

இந்த நிலையில் சென்னை பெரியமேடு பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்க மறுத்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 26 நாள் பணி என வெளிமாவட்டங்களில் இருந்து அழைத்து வந்த ஊழியர்களுக்கு போதிய உணவும், ஓய்வும் வழங்காமல் பணி செய்ய வைப்பதாக குற்றசாட்டை முன்வைத்து ஊழியர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அந்த ஊழியர்களிடம் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.