‘106 நாட்களாக திகார் சிறை’ : ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் !

 

‘106 நாட்களாக திகார் சிறை’ : ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் !

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐ விசாரித்த வந்த இந்த வழக்கில் இருந்து கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தது. அதற்கு முன்னரே அக்டோபர் 16 ஆம் தேதி கடந்த , டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அமலாக்கத் துறையினர் சிதம்பரத்தை கைது செய்தனர்.சிபிஐ வழக்கில் இருந்து வெளிவந்தும் அமலாக்கத்துறையினர் கைது செய்ததால் சிதம்பரத்தால் திகார் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை. 

ttn

இதனிடையே அவர் உடல் நலத்தைக் காரணம் காட்டி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் அளித்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், அவர் ஜாமீன் கேட்டு மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று அந்த மனு விசாரிக்கப்பட்டது. அதில், ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணையில் இருந்தும் ஜாமீன் கிடைத்துள்ளதால் சிதம்பரம் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். இன்றோடு சேர்த்து ப.சிதம்பரம் 106 நாட்கள் திகார் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.