‘தடையை மீறி பட்டாசு வெடித்ததால்’- 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!

‘தடையை மீறி பட்டாசு வெடித்ததால்’- 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!

தமிழகம் முழுவதும் தடையை மீறி பட்டாசு வெடித்த 1027 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தடையை மீறி பட்டாசு வெடித்ததால்’- 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!

நாடு முழுவதிலும் மக்கள் எதிர்நோக்கிக் காத்துக் கிடந்த தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. கொரோனா நோயாளிகளை கருத்தில் கொண்டும், சுற்று சூழல் மாசுபாட்டை கருத்தில் கொண்டும் ராஜஸ்தான், டெல்லி, சிக்கிம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தன.

‘தடையை மீறி பட்டாசு வெடித்ததால்’- 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு!

அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 1027 வழக்குகள் பதிவாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23 மாவட்டங்களில் ஒரு வழக்கு கூட பதிவாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பட்டாசு வெடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.