1000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கணுமா…இவரை வணங்குங்க… பாடல்பெற்ற தலங்கள் வரிசை – 12, கீழைத் திருக்காட்டுப்பள்ளி

1000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிடைக்கணுமா…இவரை வணங்குங்க… பாடல்பெற்ற தலங்கள் வரிசை – 12, கீழைத் திருக்காட்டுப்பள்ளி

சீர்காழியில் இருந்து 10 கி.மீ.திருவெண்காட்டில் இருந்து கீழமுதுகுளம் வழியாகப் போனால் 1 கி.மீட்டர்தான். தரங்கம்பாடியில் இருந்து வருவதனால்,அல்லிவிளாகம் வந்து அங்கிருந்து கீழமுதுளம் வழியாக கீழைத் திருக்காட்டுப்பள்ளி வரலாம்.

சாலையில் வலது புறத்தில் அருகிலேயே ஆலயம் இருக்கிறது.ஆலயத்துக்கு ராஜகோபுரம் இல்லை. ஒற்றைப் பிரகாரத்துடன்,மேற்கு நோக்கி அமைந்த கோவில்.மூலவர் சுயம்பு லிங்கமாக ஆரணிய சுந்தரேசுவரர்.அம்மன் அகிலால்ண்ட நாயகி.தீர்த்தம் அமிர்தப்பொய்கை.

ததிசி முனிவரின் முதுகெலும்பை அயுதமாக்கி விருத்திகாசுரன் என்கிற அரக்கனை கொன்ற பாவத்தால் தேவலோக அரியணையில் இந்திரன் அமர முடியாமல் போய்விட்டதாம்.அந்த பாவத்தை நீக்க வேண்டும் என்று தேவர்கள் வந்து வழிபாடு செய்த தலம் இது.

aaranyashwarar

கோவிலின் உள்ளே தசலிங்கம் என்று வழங்கப்படும் ஏழு லிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்கின்றன.அதில் இன்னொரு ஆச்சரியம் ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் இருக்கின்றன. இதுதவிர,முனீசுவரர்,பிரம்மேசுவரர் என்று இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன. அதில் பிரம்மேசுவரரை வணங்கினால்,1000 அஸ்வமேத யாகங்கள் செய்த பலன் கிட்டுமாம்.கோவிலின் உள்ளே போனால் அருகருகே மூலவர் ஆரண்ய சுந்தரேசுவரர் சந்நிதி, அம்மை அகிலாண்ட நாயகி சந்நிதி இரண்டும் அருகருகே இருக்கின்றன.

இந்தக் கோவிலில் ஒரு அதிசயமான விநாயகர் இருக்கிறார். அவரை நண்டு விநாயகர் என்று அழைக்கிறார்கள்.அதற்கு காரணம்,இங்கே பிள்ளையாருக்கு வாகனம் மூஞ்சூறு அல்ல நண்டு! நண்டாகப் போகும்படி சபிக்கப்பட்ட ஒரு கந்தர்வன் இந்த பிள்ளையாரை வழிபாட்டு அவருக்கு வாகனமாக இருந்து சாபவிமோசனம் பெற்றான் என்று கோவில் தலபுராணம் சொல்கிறது.

இரண்டு கால பூஜை நடைபெறுகிறது.காலை 9 மணி முதல் 11 மணி வரையும்,மாலை 6 முதல் 7.30 வரை மட்டுமே கோயில் திறந்திருக்கும்.காவிரி வடகரைத் தலங்களுள் இது 12 வது.திருஞான சம்பந்தர் பதிகம் பெற்றது.