தியேட்டர்களில் நாளை முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி!

 

தியேட்டர்களில் நாளை முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி!

கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. படிப்படியாக அளிக்கப்பட்ட தளர்வுகளின் போதும், தியேட்டர்களை திறக்கவும் படபிடிப்புகளை தொடங்கவும் அரசு அனுமதிக்காமலேயே இருந்தது. இது திரைத்துறையினரை கடுமையாக பாதிப்படையச் செய்தது. உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட திரைத்துறை ஊழியர்களுக்கு, நடிகர்களும் நடிகைகளும் இயக்குனர்களும் உதவிக் கரம் நீட்டினர். இதனிடையே, தியேட்டர்கள் திறக்கப்படாததால் திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸாகும் நிலை ஏற்பட்டது.

தியேட்டர்களில் நாளை முதல் 100% இருக்கைகளுக்கு அனுமதி!

திரைத்துறையினரின் தொடர் கோரிக்கைக்கு பிறகு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு, கடந்த அக்டோபர் மாதம் தியேட்டர்களை திறக்கவும் அனுமதி வழங்கியது. ஆனால், 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கட்டுப்பாட்டை விதித்தது. இதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு, பார்வையாளர்கள் வருகை குறைவு உள்ளிட்ட பல பிரச்னைகள் எழுந்தது.

இந்த நிலையில், நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைகளை உபயோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.