100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா செயல்படுகிறார் : நடிகர் ராதாரவி புகழாரம் !

 

100 ஜெயலலிதா, 200 கருணாநிதியாக அமித்ஷா செயல்படுகிறார் : நடிகர் ராதாரவி புகழாரம் !

கடந்த ஜூன் மாதம் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதனையடுத்து 4 மாதத்திலேயே அதிமுகவில் இருந்தும் விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 

முதலில் திமுகவில் இருந்த நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாகப் பேசியதன் காரணமாக அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர், கடந்த ஜூன் மாதம் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதனையடுத்து 4 மாதத்திலேயே அதிமுகவில் இருந்தும் விலகி பா.ஜ.கவில் இணைந்தார். 

ttn

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி,’ 67 வருட காலமாகத் திராவிடத்தையே சுவாசித்து வந்தேன். ஆனால், இப்போது பாஜகவில் இணைந்த பின்னர் தேசியத்தைச் சுவாசிக்கிறேன். திராவிட கட்சிகளில் இருக்கும் போது 250 வருடம் வரை பா.ஜ.க தமிழகத்தில் ஜெயிக்காது என்று நான்தான் கூறினேன். அது தவறு. வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தான் ஜெயிக்கும்.’ என்று கூறினார். 

ttn

அதனைத்தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 80% இந்துக்கள் எப்போதும் அடி பணியக் கூடாது. தமிழகத்தைக் காப்பாற்றும் ஒரே கட்சி பா.ஜ.க தான். நடிகர் ரஜினி இப்போது தான் சரியாக பேசி வருகிறார். அவரை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிய அவர், 100 ஜெயலலிதா 200 கருணாநிதியாக அமித்ஷா செயல்பட்டு வருகிறார் என்று அவரை புகழ்ந்து பேசினார்.