100 கிடாய்கள், பச்சரிசி சாதத்துடன் விருந்து: ஆண்களுக்கு மட்டும்…!

 

100 கிடாய்கள், பச்சரிசி சாதத்துடன் விருந்து:  ஆண்களுக்கு மட்டும்…!

5 அண்ணன்களுடன் பிறந்த தங்கை ஒருத்தி தனது அண்ணிகளால் கொடுமையை அனுபவிக்க அவள் வீட்டை  விட்டு வெளியேறி   முதல்நாடு கிராமத்திற்கு வந்ததும் மறைந்து போனாள்

இராமநாதபுரம் : ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வினோத திருவிழா நேற்று இராமநாதபுரத்தில் வெகு விமர்சையாக நடந்தேறியது. 

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தின் கண்மாய் அருகே எல்லைப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருவிழா நடக்கும். இந்த விழாவில் பெண்களுக்கு அனுமதி இல்லை. ஆண்கள் மட்டுமே கிடா வெட்டி அம்மனை வணங்குகின்றனர்.

festival

இதற்கு காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில் 5 அண்ணன்களுடன் பிறந்த தங்கை ஒருத்தி தனது அண்ணிகளால் கொடுமையை அனுபவிக்க அவள் வீட்டை  விட்டு வெளியேறி   முதல்நாடு கிராமத்திற்கு வந்ததும் மறைந்து போனாள் என்றும்   கிராம மக்கள் கனவில் தோன்றி தனக்கு கோவில் கட்டி வழிபடுமாறு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த கோவிலுக்கு பெண்கள்  வரக்கூடாது என்றும் ஆண்கள் மட்டுமே வழிபட்டு செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

festival

அதன்படி இந்த ஆண்டு  திருவிழாவில் நேற்று  100 கிடாய்கள் மற்றும் பச்சரிசி சாதம் வடித்து அம்மனுக்கு படையலிட்டனர். பின்பு நூற்றுக்கணக்கான ஆண்கள்  விருந்தில் பங்கேற்றுச்  சாப்பிட்டனர். மீதமுள்ள உணவை கொண்டு செல்ல கூடாது என்பதில் அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டது சென்றுள்ளனர். 

இந்த விழா தேதி அறிவிக்கப்பட்ட  நாளிலிருந்தே பெண்கள் இந்த பகுதிக்கு வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.