ஸ்டான்லி மருத்துவமனையில் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

 

ஸ்டான்லி மருத்துவமனையில் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னையில் கொரோனா பாதிப்பு 47 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கையை எடுத்தும், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடு வீடாக கொரோனா பரிசோதனை, மக்களுக்கு விழிப்புணர்வு, மருத்துவ முகாம்கள் எனப் பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்லாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்டான்லி மருத்துவமனையில் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

இதனிடையே சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் எனப் பலருக்கும் கொரோனா பரவி வருவதால், அவர்களுக்குத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2 நாட்களில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் 10 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.