பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

 

பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

தமிழ் கடவுளாக போற்றப்படும் அற்புத சக்திவாய்ந்த முருகப்பெருமான் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை தனது கருணை பார்வையால் ஆட்கொண்டு வருகிறார். கார்த்திகேயரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவத்துடன் தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவன் முருகன்.

பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

முருகன் என்றாலே நினைவுக்கு வரும் பாடல் அவனின் சஷ்டி கவசம். நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் நோய் நொடியின்றி காக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடப்படுவதே கந்த சஷ்டி கவசம்.

பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

அத்தகைய கந்த சஷ்டி கவசத்தை புதிய பரிமாணத்தில் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சியில் நமது டாப் தமிழ் நியூஸ் நிறுவனம் சூப்பர் சிங்கர் பிரபலம் பிரியங்காவின் மென்மையான குரலில் இப்பாடலை வெளியிட்டது. இப்பாடலுக்கு இஷான் தேவ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கந்த சஷ்டி கவசத்தை வெளியிட்ட முதல் 5 நாட்களில் யூடியூப் (YOUTUBE) பக்கத்தில் சுமார் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. இது தவிர Gaana,  Apple Music போன்ற முன்னணி ஆடியோ பிளாட்பார்மிலும் டாப் தமிழ் நியூஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள கந்த சஷ்டி கவசம் இடம்பெற்றுள்ளது.