12 நாட்களில் 10 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

12 நாட்களில் 10 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

கொரோனா அதிகப் பாதிப்புள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 44 லட்சத்து 95 ஆயிரத்து 499 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 56 லட்சத்து 77 ஆயிரத்து 951 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 27 ஆயிரத்து 780 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 77,89,768 பேர்.

12 நாட்களில் 10 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் புதிய நோயாளிகள் அதிகரிப்பது போலவே குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே உள்ளது.

கொவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து 11-வது நாளாக இந்தியாவில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

12 நாட்களில் 10 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9,42,217 ஆகும். 12 நாட்களில் 10 லட்சம் நபர்கள் குணமடைந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,877 நபர்கள் இந்தியாவில் குணமடைந்துள்ளனர்.

12 நாட்களில் 10 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

இதைத் தொடர்ந்து, தேசிய குணமடைதல் விகிதம் அதிகரித்து, 83.70 சதவீதமாக தற்போது உள்ளது. இது வரை 53,52,078 பேர் இந்தியாவில் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய பாதிப்புகளில் 76.62 சதவீதம் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையில் தற்போதுள்ள பாதிப்புகள் 14.74 சதவீதம் ஆகும்.

12 நாட்களில் 10 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா

2.5 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளோடு மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், 1 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளோடு கர்நாடகா உள்ளது.