கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

 

கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

ஒரு பேரிடர் உலகம் முழுவதும் இழப்பை ஏற்படுத்தும், பல லட்சம் பேரை பலி கேட்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். கொரோனா போன்ற உலகம் தழுவிய பேரிடரை நாம் சமீப காலத்தில் பார்த்திருக்கக்கூட இல்லை.

கொரோனாவைப் பரவலைத் தடுக்க அல்லது கட்டுக்குள் வைக்க ஒரே  வழி கொரோனா தடுப்பூசி தான் என்ற நிலைமைக்கு உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றனவோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஏனெனில், கொரோனாவால் புதிய நோயாளிகள் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.

கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

சில நாடுகளில் கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியிருப்பதாக பெரும் அச்சம் தரும் செய்திகள் வெளியாகியுள்ளன. வெகுசில நாடுகளே கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

சில நாடுகள் பள்ளிகளைத் திறந்து பாதுகாப்பு நடவடிக்கைகளோடு மாணவர்களை அனுமதிக்கின்றன. இன்னும் சில நாடுகல் பள்ளி, கல்லூரி திறக்கும் தேதிகளை அறிவித்திருக்கின்றன. ஆயினும் முழுமையாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்க சூழல் அமையவில்லை.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 80 லட்சத்து  25 ஆயிரத்து 181 பேர்.    

கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 1 லட்சத்து 3 ஆயிரத்து 385 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 8 ஆயிரம் பேர்.  

உலகளவில் கொரோனா பாதிப்பால் அதிக மரணங்களை எதிர்கொண்ட முதல் பத்து நாடுகள் எவை என்று பார்ப்போம்.

அமெரிக்கா – 65,49,475 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.1,95,239 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

பிரேசில் – 41,99,332 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.1,28,653 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

இந்தியா –  44,65,863 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.75,091 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

மெக்ஸிகோ –  6,47,507 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 69,095 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

இங்கிலாந்து –  3,55,219 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 41,594  பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

இத்தாலி –  2,81,583 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 35,577 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

ஃபிரான்ஸ் – 3,44,101 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 30,794 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

பெரு –  7,02,776  பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 29,628 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

ஸ்பெயின் –  5,43,379  பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 29,628 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

ஈரான் –  3,93,425 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 22,669 பேர் இந்த நோய்க்குப் பலியாகியுள்ளனர்.

இறப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் இறப்பு சதவிகிதம் 5 லிருந்து 4 –ஆகக் குறைந்திருக்கிறது. ஆனால், புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இறப்பு எண்ணிக்கையும் இன்னும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

கொரோனாவால் அதிகப் பேரை பறிகொடுத்த 10 நாடுகள் இவைதாம் – #CoronaUpdate

உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டறிந்துவிட்டது. அதைப் பதிவு செய்தும் விட்டது. அது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்புவோம்.

கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக மக்களிடம் செல்லும்போது கொரோனாவால் புதிய நோயாளிகள் அதிகரிப்பது குறைவதுடன், நோயாளிகள் குணம் பெறுவதால் இயல்பு வாழ்க்கை நோக்கிச் செல்ல முடியும்.