‘’10 வருசத்துக்கு முன்னாடி திமுக மீது இருந்த வெறுப்பில் 10% கூட எடப்பாடி ஆட்சிக்கு இல்லை’’

‘’10 வருசத்துக்கு முன்னாடி திமுக மீது இருந்த வெறுப்பில்  10% கூட  எடப்பாடி ஆட்சிக்கு இல்லை’’

ஒரு கட்சி ஒருமுறை ஆட்சியில் இருந்தாலே மக்களுக்கு அக்கட்சியின் ஆட்சி மீது அதிருப்தி ஏற்படுவது என்பது இயல்புதான். ஆனால், தொடர்ந்து இரண்டு முறையாக, 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தும் அக்கட்சிக்கு மக்களிடையே அதிருப்தி ஏற்படவில்லை. கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் எல்லாம் அதிமுகவும் -திமுகவும் சமபலத்தில் இருப்பதாகவே தெரிவிக்கின்றன. அதனால்தான் தொங்கு சட்டசபை அமையும் என்ற பேச்சு எழுந்திருக்கிறது. இன்னும் சில கருத்துக்கணிப்புகள் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்றே சொல்கின்றன.

‘’10 வருசத்துக்கு முன்னாடி திமுக மீது இருந்த வெறுப்பில்  10% கூட  எடப்பாடி ஆட்சிக்கு இல்லை’’

அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கும், இதுவரை எடப்பாடியார் அறிவித்த, நிறைவேற்றிய திட்டங்களுக்கும் பிரச்சாரத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றே தகவல்.

‘’10 வருசத்துக்கு முன்னாடி திமுக மீது இருந்த வெறுப்பில்  10% கூட  எடப்பாடி ஆட்சிக்கு இல்லை’’

பாஜக பிரமுகரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகரும் இதையெல்லாம் உணர்ந்துதான், ‘’விவசாயி மகன் தமிழகத்தின் தங்கமகன் முதல்வர், அண்ணண் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் ஆட்சியில், கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை காக்க வீட்டுக்கு வீடு நிவாரண பொருட்களும், அம்மா உணவகங்கள் மூலம் மூன்று வேளையும் தரமான உணவும் வழங்கப்பட்டது’’ என்று பாராட்டியிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் டுவிட்டினை ரீ டுவிட் செய்டிருக்கிறார் .

மேலும், ’’10 வருசம் முன்னாடி திமுக ஆட்சி முடியும் போது மக்களுக்கு தி.மு.க கட்சி மீது இருந்த வெறுப்பில் 100 ல 10% கூட இப்ப இருக்க எடப்பாடி ஆட்சி மேல மக்களுக்கு வெறுப்பு இல்லை என்பதே நிதர்சனம்.’’ என்று டுவிட்டினையும் ரீ டுவிட் செய்திருக்கிறார்.

‘’10 வருசத்துக்கு முன்னாடி திமுக மீது இருந்த வெறுப்பில்  10% கூட  எடப்பாடி ஆட்சிக்கு இல்லை’’