10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நடக்கும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயமாக நடக்கும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வுகள் மே மாதம் நடத்தப்படும் என்றும் ஒரு வாரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும்.  ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் 1 ஒரு நாள் விடுமுறை இருக்கும் என்று தெரிவித்தார். 

tn

தொடர்ந்து, மே மாதம் 3 ஆம் தேதிக்கு பிறகு தேர்வு எப்போது நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டு தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என்றும் கூறினார். மேலும், மாணவர்களுக்கு யூடியூப், பொதிகை சேனல்கள் மூலமாக பாடம் கற்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஒரு நாள் விடுமுறை விட்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.