10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா?: அமைச்சர் செங்கோட்டையன் பதில்

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா?: அமைச்சர் செங்கோட்டையன் பதில்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுவதால், ஊரடங்கை நீட்டிக்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசுகள் பரிந்துரைத்துள்ளன. இதனிடையே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

ttn

ஆனால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.