10 ஆம் வகுப்பு தேர்வு.. மாணவர்கள், ஆசிரியர்கள் இபாஸ் விண்ணப்பிக்கலாம்.. லிங்க் உள்ளே!

 

10 ஆம் வகுப்பு தேர்வு.. மாணவர்கள், ஆசிரியர்கள் இபாஸ் விண்ணப்பிக்கலாம்.. லிங்க் உள்ளே!

அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதனால் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் நடக்குமா, நடக்காதா என்ற பெரும் குழப்பம் நிலவி வந்தது. அதனையடுத்து வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதாவது, தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ttn

மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஆன்லைனில் இபாஸ் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள்,ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் தங்களது வாகனங்களுக்கு இபாஸ் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.