10 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர், ப்ரென்ச் ஃப்ரை!

10 ஆண்டுகள் ஆகியும் கெட்டுப் போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர், ப்ரென்ச் ஃப்ரை!

10 ஆண்டுகளாகியும் ஐஸ்லாந்தில் உள்ள மெக்டொனால்ட் உணவு விடுதியில் செய்யப்பட்ட பர்கரும், ப்ரென்ச் ஃப்ரையும் கெட்டுப்போகாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

10 ஆண்டுகளாகியும் ஐஸ்லாந்தில் உள்ள மெக்டொனால்ட் உணவு விடுதியில் செய்யப்பட்ட பர்கரும், ப்ரென்ச் ஃப்ரையும் கெட்டுப்போகாமல் அப்படியே இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐஸ்லாந்தில் உள்ள மெக்டொனால்ட் உணவு விடுதி கடந்த 2009 ஆம் ஆண்டு மூடப்பட்டது. மூடப்பட்ட ஒரு சில தினங்களுக்கு முன் ஜோர்துர் மராசான் என்பவரும் பர்கரும் ஃப்ரென்ச் ஃப்ரைஸும் வாங்கியுள்ளார். அதனை சாப்பிடாமல் அப்படியே வைத்துள்ளார். அந்த உணவு வாங்கி இந்த வாரத்தோடு 10 வருடங்கள் ஆகிறது.  மெக்டொனால்ட் உணவு எத்தனை நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவே இதுநாள் வரை அந்த உணவை பத்திரமாக பாதுகாத்ததாக கூறுகிறார். ஸ்னொத்ரா எனும் விடுதியில் கண்ணாடி பெட்டியில் உள்ள இந்த பர்கரை பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தியுள்ளார். 10 ஆண்டுகள் பழமையான இந்த பர்கரை பார்க்க தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தருவதாக மராசான் தெரிவிக்கிறார். தற்போது இந்த பர்கரின் புகைப்படங்கள் சமூக வலைதளத்திலும் வைரலாகிவருகிறது. 

Burger

இதேபோல் பிரபல சமூக ஆர்வலர் காரென் ஹன்ரெஹன் 1996ல் ஒரு பர்கரை வாங்கி அதை 14 ஆண்டுகள் வைத்திருந்து பார்த்தபோது எந்த மாற்றமும் இல்லை என கூறியிருந்தார். மேலும் 2010 ஆம் ஆண்டு நியூயார்க்கைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் சேலி டேவிஸ் மெக்டொனால்டிலிருந்து உணவை வாங்கி அதை ஆறு மாதத்திற்கு பாதுகாத்து தினமும் புகைப்படம் எடுத்தார்.