10ம் வகுப்புத் தேர்வு எப்போது… குழப்பத்துக்கு முடிவுகட்ட விஜயகாந்த் கோரிக்கை

10ம் வகுப்புத் தேர்வு எப்போது… குழப்பத்துக்கு முடிவுகட்ட விஜயகாந்த் கோரிக்கை

10ம் வகுப்புத் தேர்வு தொடர்பாக நிலவும் குழப்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு கட்டி தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

10ம் வகுப்புத் தேர்வு தொடர்பாக நிலவும் குழப்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு கட்டி தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் முடிந்துவிட்டன. அதிலும் கடைசித் தேர்வில் கொரோனா அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை என்று கூறப்படுகிறது. 10ம் வகுப்புத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மே மாதம் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

10th-public

அதே நேரத்தில் கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு இன்னும் பல வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே 10ம் வகுப்பு தேர்வு பற்றிய குழப்பமான கருத்து பரவி வருவதால் மாணவ மாணவிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
இதற்கு தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவுகிறது.இதுகுறித்து உயர்கல்வி துறையோடு கலந்து ஆலோசித்து மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பதை போக்க, ஒரு தெளிவான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிக்கவேண்டும்” என்று கூறியுள்ளார்.