மூன்றே நாட்களில் திமுகவில் இணைந்த ஒரு லட்சம் பேர்!

 

மூன்றே நாட்களில் திமுகவில் இணைந்த ஒரு லட்சம் பேர்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தொடங்கி வைத்தார். “எல்லோரும் நம்முடன்” என்ற இணையவழி உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்து கொள்ளும்படியும் கோரிக்கை விடுத்தார். அதன்படி திமுகவில் இணைய விரும்புபவர்களுக்கான இணையதள முகவரியும் அறிமுகம் செய்யப்பட்டன. திமுகவில் இணைய விரும்புபவர்கள் https://www.dmk.in/joindmk/ என்ற இணையதளத்தில் பெயர், முகவரி, ஈமெயில் முகவரி, வாக்காளர் அட்டை, வாட்ஸ்அப் விவரங்களை கொடுத்தால் திமுகவில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மூன்றே நாட்களில் ஒரு லட்சம் பேர் திமுகவில் இணைந்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், “#எல்லோரும்நம்முடன் முன்னெடுப்பை அறிமுகம் செய்த 72மணி நேரத்தில் 1,00,000பேர் புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது தமிழ் மக்கள் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கான நற்சான்று.

இதனைச் சாத்தியப்படுத்தியோர் அனைவர்க்கும் எனது நன்றிகள். இதே வேகம் தொடரட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.