தினமும் 1 லட்சம் புதியநோயாளிகள் – கொரோனா அவதியில் அமெரிக்கா

தினமும் 1 லட்சம் புதியநோயாளிகள் – கொரோனா அவதியில் அமெரிக்கா

கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பாதித்த நாடு அமெரிக்காதான். கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதலே புதிய நோயாளிகள் அதிகரித்ததும் அமெரிக்காவில்தான். அதிபர் தேர்தலில் முடிவை தீர்மானித்ததிலும் கொரோனாவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

தினமும் 1 லட்சம் புதியநோயாளிகள் – கொரோனா அவதியில் அமெரிக்கா

இன்றைய தேதி வரை அமெரிக்காவின் மொத்த பாதிப்பு 1,04,21,956 பேர். இவர்களில் 65,52,610 பேர் குணமடைந்துவிட்டனர். சிகிச்சைப் பலன் இல்லாது 2,44,448 பேர் இறந்துவிட்டனர். அமெரிக்காவில் இறப்பு விகிதம் 4 சதவிகிதமாக இருக்கிறது.

டெக்சாஸ் மாகாணத்தில் 10,30,227 பேரும், கலிபோர்னியாவில் 9,83,371 பேரும், ஃப்ளோரிடாவில் 8,47,821 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் 1 லட்சம் புதியநோயாளிகள் – கொரோனா அவதியில் அமெரிக்கா

தினசரி கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் எண்ணிக்கையும் மிக அதிகளவில் உள்ளது. நேற்று மட்டுமே 1,25,689 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்று மட்டுமல்ல, சில நாட்களாகவே புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தே வருகிறது.