ஈரோடு இதுவரை 1.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

 

ஈரோடு இதுவரை 1.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது கட்டமாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இரண்டாவது கட்டமாக வீரியம் அதிகரித்து காணப்படுவதால் தினமும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு இதுவரை 60 சதவீதம் பேர் மாநகர் போது சேர்ந்தவர்கள் தான்.

ஈரோடு இதுவரை 1.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிசி ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் பிசிஆர் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டம் முழுவதும் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் 1.75 லட்சம் பிசி ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்று கண்ட அறியப்பட்டவர்கள் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் ஈரோடு அரசு மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள் அந்தியூரில் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.