உலக யோகா தினத்தையொட்டி ஆன்லைனில் 1.5 லட்சம் சி.ஆர்.பி.எஃப் பங்கேற்கும் யோகா!

 

உலக யோகா தினத்தையொட்டி ஆன்லைனில் 1.5 லட்சம் சி.ஆர்.பி.எஃப் பங்கேற்கும் யோகா!

உலக யோகா தினத்தையொட்டி ஆன்லைனில் 1.5 லட்சம் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுக்க சீனாவுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதில் அரசு இறங்கியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உலக யோகா தினத்தையொட்டி ஆன்லைனில் 1.5 லட்சம் சி.ஆர்.பி.எஃப் பங்கேற்கும் யோகா!ஜூன் 21 சனிக்கிழமை கொண்டாடப்படும் யோகா தினத்தையொட்டி 1.5 மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் ஆன்லைன் மூலம் யோகா செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி கான்பரஸ் நிகழ்ச்சியை ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவற்றில் காணலாம். காலை 11 மணி அளவில் பெங்களூருவில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் எச்.ஆர்.நாகேந்திரா சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மத்தியில் ஆன்லைன் மூலம் பேசுவார் என்று கூறப்பட்டுள்ளது.