மரம் தங்கசாமியின் நினைவு! காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்கள் நடவு!

மரம் தங்கசாமியின் நினைவு! காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்கள் நடவு!

மரம் தங்கசாமியின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் மூன்றே நாட்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றியவர் மரம் தங்கசாமி. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். தொடக்கத்தில் இருந்து ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளில் கரம்கோர்த்து இணைந்து செயலாற்றிய அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.

மரம் தங்கசாமியின் நினைவு! காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்கள் நடவு!

இதையடுத்து, அவரின் சேவையை நினைவு கூறும் விதமாக கடந்தாண்டு முதல் அவருடைய நினைவு நாளில் மரக்கன்றுகள் நடும் பணியை ஈஷா வேளாண் காடுகள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் செப்.14, 15, 16 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்பட்டன.

இதன்மூலம், சுமார் 331 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நட்டுள்ளனர். குறைந்தப்பட்சம் 450 மரங்கள் முதல் அதிகப்பட்சம் 15 ஆயிரம் மரங்கள் வரை விவசாயிகள் நட்டுள்ளனர்.

மரம் தங்கசாமியின் நினைவு! காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்கள் நடவு!

மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மரம் நடும் விழாவில் மரம் தங்கசாமியின் மகன் கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

மரம் தங்கசாமியின் நினைவு! காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்கள் நடவு!