“1 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி”.. விளைச்சல் அதிகரிப்பால் அவதிப்படும் விவசாயிகள்!

 

“1 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி”.. விளைச்சல் அதிகரிப்பால் அவதிப்படும் விவசாயிகள்!

உள்ளூர் சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தான் விளைவிக்கப் படுகின்றன

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மழைக்காலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் காய்கறி விளைச்சல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் காய்கறி விலை கணிசமாகக் குறைந்துள்ளது. உள்ளூர் சந்தைகளில் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தான் விளைவிக்கப் படுகின்றன. இங்கு மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ttn

ஓசூர் பகுதியில் தக்காளி விளைச்சல் அதிகரித்திருப்பதாலும் மற்ற மாநிலங்களில் இருந்து அதிகமாகத் தக்காளி விற்பனைக்காக வந்து கொண்டிருப்பதாலும் கிலோ 1 ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், ஓசூரில் இருந்து உள்ளூர் சந்தைகளுக்கு அனுப்பப்படும் தக்காளி முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் விளைவிக்கப் போட்ட பணத்தைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். 

ttn

இதன் காரணமாக உள்ளூர் சந்தைகளிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தக்காளி ஆங்காங்கே சாலையோரங்களில் கொட்டப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பது தான் இதற்குக் காரணம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.