1 மில்லியன் ஹானர் ஸ்மார்ட்போன்கள்….தீபாவளி விற்பனையில் சாதனை!

 

1 மில்லியன் ஹானர் ஸ்மார்ட்போன்கள்….தீபாவளி விற்பனையில் சாதனை!

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் ஸ்மார்ட்போன்கள் தீபாவளி விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

டெல்லி: ஹூவாய் நிறுவனத்தின் துணை பிராண்டான ஹானர் ஸ்மார்ட்போன்கள் தீபாவளி விற்பனையில் சாதனை படைத்துள்ளது.

ஹூவாய் நிறுவனத்தின் ஆன்லைன் சார்ந்த துணை பிராண்டான ஹானர் நிறுவனம், இந்தாண்டு தீபாவளி பண்டிகை சமயத்தில் ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஹானர் ஸ்டோர் ஆகியவை மூலம் சுமார் 10 லட்சத்திற்கும் (ஒரு மில்லியன்) அதிகமான ஹானர் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் நடப்பாண்டு தீபாவளி சமயத்தில் மட்டும் 300 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

honor6

மேலும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்க மேற்கொண்ட உண்மையான முயற்சியால் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக ஹூவாய் நிறுவன விற்பனை பிரிவு துணை தலைவர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் விற்பனையில் ஹானர் நிறுவனத்தின் நடுத்தர ரக போன்களான ஹானர் 9N மற்றும் ஹானர் 8X இரண்டு ஸ்மார்ட்போன்களும் முன்னணி பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி ஃப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் ஸ்டாக் உள்ளவரை ஹானர் தனது ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்து வருகிறது. ஹானர் 9N, 9 லைட், 7s, 9i, 7A, மற்றும் 10 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களும் தீபாவளி சமயத்தில் சிறப்பு விலையில் இடம்பெற்றது.