06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

 

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 23 I வியாழக்கிழமை I மே 6, 2021

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

06-05-2021 இன்றைய ராசி பலன்!

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மேஷம்

கோபத்தால் வம்பை விலைக்கு வாங்கு நாள். பொறுமை தேவை. பணம் கேட்டு சிலர் தொந்தரவு செய்வார்கள். வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டிய நாள். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு தோன்றும். ஒருவரையொருவர் அனுசரித்து நடப்பது நல்லது. வெளியில் செல்லும்போது கவனம் தேவை. பணவரவு உண்டு, ஆடை, ஆபரணங்கள் சேரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காதல் பிரச்னையை ஏற்படுத்தும்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

ரிஷபம்

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெற்றிக்கிடைக்கும் நாள். பிரிந்தவர்கள் சேருவார்கள். கடன் குறையும். மனம் நிம்மதி கிடைக்கும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்கான தேவையை பூர்த்தி செய்வீர்கள். மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பெரியோர்களை மதித்து நடப்பது நல்லது. பணிச்சுமை அதிகரிக்கும். சில பெண்களுக்கு நியாபக மறதி ஏற்படலாம்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மிதுனம்

மன கஷ்டங்கள் மற்றும் பிரச்னைகள் தீரும். தாராள பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும், மனைவி, குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். திருமண பேச்சுவார்த்தை கைக்கூடும்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

கடகம்

வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், எதிர்பாராத முன்னேற்றங்களும் அதிர்ஷ்ட வாய்ப்ப்புகளும் கிடைக்கும். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும், தடைகளை உடைத்தெறிந்து வெற்றியை தட்டிச்செல்லும் நாள். உடல் ஆரோக்கியம் சீராகும் நாள். கடினமான வேலையை செய்துவிடுவீர்கள். பாராட்டுக்கள் கிடைக்கும் நாள். பொறுமையாக இருப்பது நல்லது.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

சிம்மம்

தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை கைவிடவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. அக்கம்பக்கத்தினருடன் அளவாக நடந்துகொள்வது நல்லது. சட்டென வார்த்தைகளை விடாதீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். காதல் உங்களுக்கு இன்பத்தையே கொடுக்கும், வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். செலவை கட்டுப்படுத்துங்கள் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்டு செயல்படவும். மகிழ்ச்சி மனதுக்குள் பெறும்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

கன்னி

அந்தஸ்து கூடும். செல்வம் பெருகும். வாகனம், வீடு, மனை வாங்கக்கூடிய யோகமான நாள். நினைத்தவரையே கரம் பிடிப்பீர்கள். பெண்களுக்கு குடும்பத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். கல்விக்காக எடுக்கும் முயற்சிகளுக்கு மாணவர்களுக்கு வெற்றியை கிடைக்கும். கடன் விவகாரத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வருமானம் உயரும், விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும். மனதுக்குள் இருந்த குழப்பங்கள் தீரும்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

துலாம்

மன மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும் நாள். பெரிய பிரச்னைகள் எல்லாம் ஏதுமில்லை. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைவரம் கிடைக்கும். கோவில் குளங்களுக்கு செல்வீர்கள், நல்லது நடக்கும் நாள். சமூக பொறுப்புகள் வந்துசேரும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுவீர்கள்.எதிர்பாராத செலவுகள் ஏற்படும்நாள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

விருச்சிகம்

தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் மனக்கவலைகள் ஏற்படும்நாள். தேவையில்லாத வேலைகளில் ஈடுபட வேண்டாம். யாரை பற்றியும் கேலி பேச்சு பேச வேண்டாம், செய்யும் வேலைகளில் கவனம் தேவை. பங்குதாரர்களிடம் இருந்த பிரச்னை தீரும். எதிர்பாராத செலவுகள், விரயங்கள் ஏற்படும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

தனுசு

உழைத்த உழைப்புக்கு பலன் கிடைக்கும் நாள். தன்னம்பிக்கை கூடும் நாள், பெண்கள் அவசர அவசரமாக எந்த வேலையையும் செய்ய வேண்டாம். மற்றவர்களின் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உற்றாற் உறவினர்களிடையே மன கசப்பு ஏற்படும். பணத்தால் உறவினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக ஏற்படும். மனதுக்குள் மகிழ்ச்சிக்கூடும் நாள். பெரிய முதலீட்டை தவிர்க்கவும்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மகரம்

நீங்கள் நினைப்பதற்கு மாறாக காரியங்கள் நடக்கும். குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீண் பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். வாகன செலவுகள் கூடும். உயரதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். மனக்குழப்பங்கள் ஏற்படும் நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களிடம் முன்கோபத்தை காட்டுவீர்கள். கடன் வாங்க வேண்டாம். அவசர முடிவுகளை மேற்கொள்ள வேண்டாம்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

கும்பம்

உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளிநாட்டிலிருந்து வரும் தகவல் ஆனந்தத்தை கொடுக்கும். வெளியூர், வெளிநாடுகளில் நல்ல வேலை கிடைக்கும். பெற்றோர்களை மதித்து நடப்பது நல்லது.அக்கம்பக்கத்தினருடம் எச்சர்க்கையுடன் ஈடுபடுங்கள். முன் கோபத்தை தவிர்க்கவும். திருமண ஏற்பாடுகள் கைக்கூடும். யாரை பற்றியும் விமர்சனங்களை முன்வைக்காதீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவைப்படும் நாள்.

06-05-2021 தினப்பலன் – வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஏற்படும் நாள்

மீனம்

மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாள். ஆதரவற்றோருக்கு உதவி செய்வீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை புரிந்துகொள்வீர்கள். வாக்குவாதத்தை குறைத்துக்கொள்ளவும். கோபத்தை குறைத்துக்கொள்ளவும். புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு உண்டு. தாராள தனவரவு உண்டு. தொழிலில் லாபம் சுமாராகவே இருக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும், சில காரியங்கள் தாமதமாக முடியலாம்.