04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

 

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 21 I செவ்வாய் கிழமை I மே 4, 2021

04-05-2021 இன்றைய ராசி பலன்!

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மேஷம்

இனிய பயணங்கள் செல்லவேண்டியிருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. மனதுக்கு பிடித்தமான நண்பர்கள் கிடைப்பர். மாலை நேரத்துக்கு பின் நல்ல காரியங்கள் அரங்கேறும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுவீர்கள். விருப்பங்கள் நிறைவேறும் நாள். எதிலும் கவனமாக இருங்கள். திருமணயோகம் கைக்கூடி வரும். காதலிப்பவர்களுக்கு சில சிக்கல் ஏற்படக்கூடும். எதையும் செய்யும்போது ஒருமுறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

ரிஷபம்

வாழ்க்கை தரம் உயரும், அரசால் ஆதாயம் உண்டு. பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலைச்சல் ஏற்படும் நாள். மனதுக்குள் வீண் கவலைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பணிகளை ஒப்படைக்காதீர்கள். சுப செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார்த்தைகளை யோசித்து பேசவும். மனதுக்கு பிடித்தவரையே கரம் பிடிப்பீர்கள்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மிதுனம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். விருப்பமில்லாமல் எந்தவொரு விஷயத்திலும் ஈடுபட வேண்டாம். பெண்களுக்கு இன்பம் பொங்கும் நாள். பய உணர்வை விட்டுவிடுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம். வெளிவட்டாரத்தில் தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பண சேமிப்புகளில் ஆர்வம் காட்டுவீர்கள். திட்டுமிட்டு செலவு செய்யுங்கள்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

கடகம்

வாதத்தை தவிர்த்துவிட்டு அமைதியை கடைபிடியுங்கள். கோபத்தை பெற்றோரிடம் காட்ட வேண்டாம். இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டம் தொடங்குகிறது. காரியங்களில் கவனம் தேவை. அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற கடுமையாக போராடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதை தவிர்த்துவிடுங்கள். கடன் வாங்காதீர்கள். வாக்குறுதியோ, ஜாமீனோ கொடுக்க வேண்டாம்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

சிம்மம்

பேச்சுத்திறமை வெளிப்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. நிதித்துறையில் இருப்பவர்கள் கவனமாக செலவு செய்வது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் பேசும்போது கவனம் தேவை.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

கன்னி

உடல் ஆரோக்கியம் சீராகும் நாள். தனவரவுக்கு குறைவு இல்லை. சேமிப்பை அதிகரிப்பீர்கள். உன்னத செயல்களை செய்து பாராட்டுக்களை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உண்டு. நல்ல விஷயங்கள் காதுக்கு வந்து சேரும். பயணங்கள் மூலம் நன்மை உண்டாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் புதிதாக அறிமுகமானவருடன் கவனமாக பழகுங்கள்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

துலாம்

நிதிநிலையில் எந்த பிரச்னையும் இருக்காது. கடன் பிரச்னை தீரும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கு விஷயத்தில் கவனம் தேவை. எதிர்பாராத அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். பெற்றோரை மதித்து நடப்பது நல்லது. நீண்ட நாட்களாக வாங்க நினைத்த வீடு, மனை வாங்குவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு இதமான நாள்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

விருச்சிகம்

வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரியங்களை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. யாருக்கும் பஞ்சாயத்து செய்ய வேண்டாம். வார்த்தைகளை சட்டென விடாதீர்கள். சிக்கனத்தை கையாளுங்கள். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுங்கள். சகோதரி மற்றும் தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. மறதி அதிகரிக்கும். நகைகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

தனுசு

மனசோர்வு ஏற்படும் நாள். பண பொறுப்பை யாரிடமும் கொடுக்காதீர்கள். அன்னையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். யாரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட வேண்டாம். சிக்கனமாக இருங்கள். உங்கள் பிரச்னைகளை மற்றவர்களிடம் சொல்ல வேண்டாம். போட்டி, பொறாமைகள் ஏற்படும். வெற்றியை நோக்கி பயணியுங்கள்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மகரம்

வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும் நாள். பயணங்களால் நன்மை கிடைக்கும் நாள். புத்திரை பாக்கியம் ஏற்படும்.சொத்துக்களில் இருந்த பிரச்னை தீர்ந்துவிடும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வியாபாரம் நன்றாக கிடைக்கும். எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும்

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

கும்பம்

அரசு துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படும். வாழ்க்கையில் இனிய திருப்பங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.ஆயுதங்களை கையாளும்போது கவனம் தேவை. அடுத்தவருக்கு உதவி செய்யப்போய் வீண் பிரச்னைகளில் சிக்கிக்கொள்வீர்கள். புத்தி கூர்மை வெளிப்படும். கடன்கள் அடைபடக்கூடிய நிலை ஏற்படும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

04-05-2021 தினப்பலன் – காரிய தடை நீங்கும் நாள்

மீனம்

வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது. பெண்களுக்கு விரயம் ஏற்படும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். சிலர் உங்களுக்கு உதவி செய்ய தயங்கலாம். பண வரவு சுமாராகவே உள்ளது. புதிதாக இடம் வாங்கலாமா என்ற சிந்தனைகள் ஏற்படும். உத்தியோகத்தில் பணிசுமை ஏற்படும். அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவீடாதீர்கள். கோபங்களை குறைத்துக்கொள்வது. உங்களின் மன கஷ்டத்தை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.