அனைத்து உடல் நோவுகளையும் தீர்த்து வைக்கும் ‘ஐங்காயப்பொடி’

 

அனைத்து உடல் நோவுகளையும் தீர்த்து வைக்கும் ‘ஐங்காயப்பொடி’

உடலைக்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர்.

உடலைக்காக்கும் பொடி வகைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக உணவில் சேர்த்து வந்திருக்கின்றனர்.

சாதாரண சளி, இருமலா? தூதுவளை பொடி, எடைக்கூட எள்ளுப்பொடி, எடைக்குறைய கொள்ளுப்பொடி சர்க்கரை வியாதிக்கு வெந்தயப்பொடி என பட்டியல் போட்டு கொண்டே போகலாம்.

ஒவ்வொரு பொடியாக சாப்பிடுவதை விட ஒட்டு மொத்த உடலுக்கும் நன்மை பயக்கும் ஒரே பொடியாக ஐங்காயப் பொடியை எடுத்துக் கொள்ளலாம்.

அட்டகாசமான பார்ட்டியில் உண்ட இரவு விருந்து உண்டாக்கும் எதுக்களிப்பு, வயிறு முதல் தொண்டை வரை எரிய வைத்து ஒட்டு மொத்த செரிமானத் திறனையே உருக்குலைக்கிறது. விளைவு செரிமானம் குறையும் போது அனைத்து வியாதிகளும் படையெடுத்து வருகிறது.

இதற்கு தீர்வு அன்னப்பொடி எனும் ஐங்காயப்பொடி.மிகச் சிறந்த மருந்து. ஜீரணத்தை வரை முறைப்படுத்தும்.

தினசரி மதிய உணவில் முதல் வாய் சுடுசோறை இந்த அன்னப்பொடி சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட வேண்டும்.

தேவையான பொருட்கள்:

வேப்பம் பூ – ஒரு டேபிள்ஸ்பூன்
திப்பிலி – 4
சுண்டைக்காய் வற்றல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மணத்தக்காளி வற்றல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
கல் உப்பு – தேவையான அளவு
துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
தனியா – ஒரு டீஸ்பூன்.

செய்முறை :

podi

வெறும் வாணலியில் துவரம்பருப்பு, பெருங்காயம், மல்லி விதை, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.

மணத்தக்காளி வற்றல், சுண்டல் வற்றல், திப்பிலி, வேப்பம்பூ என்று ஒவ்வொரு பொருளின் தன்மைக்கேற்ப வரிசைப்படுத்தி வறுத்து எடுக்கவும்.

இல்லையெனில் ஏதாவது ஒரு இடுபொருள் கருகினாலும் ஐங்காயப்பொடி ருசி கெடும்.
ஆறிய உடன் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்.

காற்றுப் புகா டப்பாவில் போட்டு பத்திரப் படுத்தவும்.

சுடு சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் ஐங்காயப் பொடியைப் போட்டு கலந்து சாப்பிடுங்கள்.

அமிர்தமாக இருக்கும். வயிற்றுப் பொருமலை நீக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்