ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்!!

 

ஹோண்டா நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களுக்கு அதிரடி ஆஃபர்.. வாரி வழங்க காரணம் இதுதான்!!

ஹோண்டா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்  அதிக விற்பனையில் தனது இருசக்கர வாகனங்களுக்கு  அதிரடியாக ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹோண்டா நிறுவனம் தனது பிரதான இரு சக்கர வாகனங்களான ஆக்டிவா 5ஜி மற்றும் ஹோண்டா சைன் இரண்டு மாடல்களும் அதிரடியாக ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது வெறும் 1100 ரூபாய் மட்டுமே முன்பணம் செலுத்தி இந்த இரண்டு வாகனங்களில் ஒன்றை எடுத்துச் சொல்லலாம்.

ஹோண்டா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்  அதிக விற்பனையில் தனது இருசக்கர வாகனங்களுக்கு  அதிரடியாக ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது.

honda

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹோண்டா நிறுவனம் தனது பிரதான இரு சக்கர வாகனங்களான ஆக்டிவா 5ஜி மற்றும் ஹோண்டா சைன் இரண்டு மாடல்களும் அதிரடியாக ஆஃபர்களை வாரி வழங்கியுள்ளது வெறும் 1100 ரூபாய் மட்டுமே முன்பணம் செலுத்தி இந்த இரண்டு வாகனங்களில் ஒன்றை எடுத்துச் சொல்லலாம். மேலும் வட்டி இல்லா தவணை முறையையும் இந்த இரு வாகனங்களுக்கு வழங்கியிருக்கிறது. இதன் மூலம் விற்பனை இரட்டிப்பாக வாய்ப்புள்ளது என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த அதிரடி விலை குறைப்பிற்கு காரணம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்-6 என்கிற தரச்சான்றிதழ் பெற்ற வாகனப்புகை உமிழ்வு குறைப்பு விதிப்படி தயாரிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படும். அதற்கு குறைவான தரத்தில் இருக்கும் வாகனங்களின் விற்பனை இந்தியாவில் முற்றிலுமாக நிறுத்தப்படும். 

honda bikes

இதனால் தற்போது இருந்தே ஆஃபர்களை வாரி வழங்கி விற்பனையில் ஈடுபட்டு வருகிறது ஹோண்டா நிறுவனம். ஹோண்டா நிறுவனம் மட்டுமல்லாது, இந்த வாகன புகை தரச்சான்றிதழ் வழங்கல் அறிவிப்பை தொடர்ந்து பல நிறுவனங்கள் ஆஃபர்களை பயனாளர்களுக்கு அள்ளித்தந்து வருகிறது. 

செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்தே ஆஃபர் விற்பனை துவங்கிவிட்டது. அடுத்த சில மாதங்களுக்கு இது நீடிக்கும் என ஹோண்டா நிறுவன விற்பனை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பிஎஸ்-6 புகை உமிழ்வு குறைந்த தரச்சான்றிதழ் பெற்ற தரத்திலான வாகனத்தை ஹோண்டா நிறுவனம் இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டு, மற்ற நிறுவனங்களும் இதேபோல் பிஎஸ்-6 தரத்திலான வாகனங்களை தயாரித்து விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.