ஹோட்டல் பெயர் கலியுகா… விற்பதோ கம்மங்களியும் ; கேழ்வரகு களியும்

 

ஹோட்டல் பெயர் கலியுகா… விற்பதோ கம்மங்களியும் ; கேழ்வரகு களியும்

அதிகபட்சமாக 20 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.வழக்கமான அரிசி ஆனாலும் களியும் கீரைக்குழம்பும் கிடைக்கும்.

சேலம் சூரமங்கலம் ஜங்ஷனில்,சோனா இப் எதிரே இருக்கிறது இந்த உணவகம்.
டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து அலுத்த தேவேந்திரன்,ராஜாராமன் என்கிற இரண்டு இளைஞர்கள் 18 வருடம் முன்பு துணிந்து உணவகத் தொழிலில் இறங்கி சாதித்து இருக்கிறார்கள்.வாருங்கள் கடைக்குள் போவோம்.அதிகபட்சமாக 20 பேர் அமர்ந்து சாப்பிடலாம்.வழக்கமான அரிசி ஆனாலும் களியும் கீரைக்குழம்பும் கிடைக்கும்.

kaliyuga

அதுபோல இந்த கலியுகாவில் களிக்கு விதவிதமான சைட் டிஷ்கள் தருகிறார்கள்.அதில் சூப்பர் ஸ்டார் என்பது கருவாட்டுக் குழம்பு.அதுவும் அதிகம் அறியப்படாத கொள்ளிக் கருவாட்டுக் குழம்பு இங்கே கிடைக்கிறது. அது தவிர மட்டன் குழம்பு,நாட்டுக் கோழிக் குழம்பு,தலைக்கறி,குடல் கறி என்று களியுடன் ஜோடி சேர வரிசைகட்டி நிற்கின்றன குழம்பு வகைகள். இதெல்லாம் தவிர,கொங்கு மண்டல மக்களின் ரகசியக் காம்போவான கேழ்வரகு களி பொட்டுக்கடலை சட்டினி,கம்மங்களி நிலக்கடலைத் துவையலும் உண்டு.

பிளாஸ்டிக் தட்டில் வட்டமாக வெட்டிய ஒரு வாழை இலை போட்டு இரண்டு கரண்டி நிறைய சூடான கம்பங்களி வைக்கிறார்கள். இத்துடன் ஒரு கப்பில் கீரை மசியல் தருகிறார்கள்.சின்ன வெங்காயம் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து கடைந்த.அந்த கீரையும் களியும் 40 ரூபாய்.அதோடு மற்ற கறிக்குழம்புகள் கேட்டாலும் கொடுக்கிறார்கள்.

kali

மட்டன் ,நாட்டுக்கோழி, மீன்,கருவாட்டு குழம்புகளுக்கு 30 ரூபாய் முதல் 50 ரூபாய்வரை விலை வைத்திருக்கிறார்கள்.இதுதவிர,வெங்காயம் பச்சை மிளகாய் வெட்டிப் போட்ட கேள்வரகு ரொட்டியும் இங்கே கிடைக்கிறது.

இந்த உணவகத்தின் இன்னொரு சிறப்பு இங்கு வேலைபார்க்கும் செஃப்கள்.
கேழ்வரகு களி செய்யத் தெரிந்த மாஸ்ட்டரை எங்கே தேடுவது.அதனால் ராஜாராமும் தேவேந்திரனும் என்ன செய்தார்கள் தெரியுமா?. மாது,தங்கம்மாள்,வசந்தா என்று மூன்று கிராமத்துப் பெண்மணிகளை அழைத்துவந்து களி மாஸ்ட்டர் ஆக்கிவிட்டார்கள்.அவர்களின் கைமனத்தில் இன்று சேலத்தில் பிரபலமான உணவகம் ஆகிவிட்டது கலொயுகா.ஏழைத் தொழிலாளர்கள் முதல் உள்ளூர்,எம்.பி எம்.எல்.ஏக்கள்,ஏற்காட்டுக்கு படப்பிடிப்புக்கு வரும் நடிகர்கள் என்று கலியுகாவுக்கு நிறைய வி.ஐ.பி கஸ்டமர்களும் வந்து விட்டார்கள்.