ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு !

 

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மனு !

விவசாயிகள் சங்கம் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைக்கச் சம்பந்தப்பட்ட நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் கேட்க வேண்டும் என்றும் அத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதி மக்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறை இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்க வேண்டாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்தது.இதற்கு, டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. 

ttn

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பி.ஆர்.பாண்டியன் சார்பாக, வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி நேற்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்நிலையில், விவசாயிகள் சங்கம் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாநில அரசின் அனுமதி பெற வேண்டாம் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விவசாயம் முடங்கும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ttn

மேலும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்காமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.