‘ஹே ராம்’ படத்தில் கூறிய விஷயங்கள் நடந்து வருகிறது…கமல் ஹாசன் ட்வீட்!

 

‘ஹே ராம்’ படத்தில் கூறிய விஷயங்கள் நடந்து வருகிறது…கமல் ஹாசன்  ட்வீட்!

பிரபல நடிகர்கள் ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர்  கூட புதுப்பொலிவுடன் வெளியானது. 

`ஹே ராம்’  திரைப்படம் வெளியாகி  இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிறது. அரசியல் நுட்பத்திலும் கலைநுட்பத்திலும் சமகாலத்துக்குப் பொருந்திப்போவதிலும்  இந்த படம் இன்றளவும் பிரமிக்கவைக்கும் படைப்பாகவே உள்ளது. ஹே  ராம் படத்தில் கமலின் பெயர் சாகேத் ராம். சாகேத் என்பது அயோத்தியைக் குறிக்கும் சொல்லும்.  

 

ராமனான சாகேத் ராம் கண்களுக்கு, ராவணனாகத் தெரிகிறார் காந்தி. ஒருகட்டத்தில், அதே காந்தி அதே ராமின் கண்களுக்கு ராமனாகத் தெரிகிறார் . இவ்வாறாக அந்த படைப்பை கொண்டு சென்றிருப்பார் கமல் ஹாசன். இப்படத்தில் பாலிவுட்  பிரபல நடிகர்கள் ஷாருக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர்  கூட புதுப்பொலிவுடன் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஹே ராம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ஹே ராம் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 தேதி வெளியானது.இந்த படம் வெளியாகி 20 வருடங்கள் இன்றுடன் கடந்து விட்டது. இந்த படத்தை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த படம் பேசிய அச்சங்களும், எச்சரிக்கைகளும் நடந்து வருவது வருத்தமளிக்கிறது. இந்த சவால்களை எதிர்கொள்ள சமூக நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும்’ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.