ஹெல்மெட் போடாமல் செல்பவர்களுக்கு காத்திருக்கிறது ‘‘இன்ப சுற்றுலா’’

 

ஹெல்மெட் போடாமல் செல்பவர்களுக்கு காத்திருக்கிறது ‘‘இன்ப சுற்றுலா’’

தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வகனத்தில் சென்ற 70 பேரை அங்குள்ள 11 நீதிமன்றங்களுக்கு காவல்துறையினர் சுற்றுலா அழைத்துச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தர்மபுரியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வகனத்தில் சென்ற 70 பேரை அங்குள்ள 11 நீதிமன்றங்களுக்கு காவல்துறையினர் சுற்றுலா அழைத்துச் சென்ற சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. 

பொதுவாக ஹெல்மெட் போடாமல் செல்பவர்களில் பர்ஸ்களை காவல்துறையினர் பதம் பார்ப்பதுண்டு… இல்லையென்றால் நாலு திட்டோ, அட்வைஸோ சொல்லி அனுப்புவதுண்டு. ஆனால் தருமர்புரியில் உள்ள போக்குவரத்து காவல்துறையினர்  இன்று (07.08.2019) ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய சுமார் 70 நபர்களை அபராதம் ஏதும் விதிக்காமல் போலீஸ் வாகனம் ஒன்றில் ஏற்றிக் கொண்டு தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்குச் சுற்றுலாவாக அழைத்து சென்றுள்ளனர். ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு தேநீரும் வாங்கிக்கொடுத்துள்ளனர். 

மாவட்ட அமர்வு மற்றும் கூடுதல் அமர்வு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம், முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம், மாவட்ட மகிளா மற்றும் கூடுதல் மகிளா நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட 11 நீதிமன்றங்களைச் சுற்றிக்காட்டி விட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  ஹெல்மெட் போடாமல் சென்றால் என்னென்ன சட்டரீதியான சிக்கல்களையும், நேரவிரயத்தையும் சந்திக்க நேரும் என்பதை உணர்த்தவே இத்தகைய நூதன தண்டனை விதிக்கப்பட்டதாக தருமபுரி மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.