ஹெலிகாப்டர் மூலம் வீடுகளுக்கு பணம் போடுகிறார் மோடி! – கர்நாடகாவை கலக்கிய வதந்தி

ஹெலிகாப்டர் மூலம் வீடுகளுக்கு பணம் போடுகிறார் மோடி! – கர்நாடகாவை கலக்கிய வதந்தி

கர்நாடக மாநிலத்தில் பப்ளிக் டிவி என்ற கன்னட சேனல் உள்ளது. இதில், ஹெலிகாப்டரில் வந்து பணம் போடப் போகிறார் மோடி என்ற அர்த்தத்தில் செய்தி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது.

கன்னட ஊடகம் ஒன்று ஹெலிகாப்டரில் வந்து மோடி பணம் போடப் போகிறார் என்று செய்தி வெளியிட்டதால் பலரும் வீட்டு மாடியில் காத்திருந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பப்ளிக் டிவி என்ற கன்னட சேனல் உள்ளது. இதில், ஹெலிகாப்டரில் வந்து பணம் போடப் போகிறார் மோடி என்ற அர்த்தத்தில் செய்தி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது.

modi-helicopter

இதனால், பலரும் ஹெலிகாப்டர் எப்போது வரும், பணம் எப்போது போடுவார்கள், வேறு யாராவது எடுத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று கருதி வீட்டு மாடி, சாலையில் காத்துக்கிடந்துள்ளனர். 

இது குறித்து மத்திய அரசுக்கு புகார் வரவே இது குறித்து ஆய்வு நடத்தியுள்ளது மத்திய அரசின் ஊடக தொடர்பு அமைப்பான பி.ஐ.பி. இதன் கூடுதல் இயக்குநர் ஜெனரல் நாகேந்திர சுவாமி கூறுகையில், “ஏன் இப்படி பொய்யான செய்தியை வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடி வரும் நிலையில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது. இது கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தின்படி தவறு. இது குறித்து அந்த டி.வி நிர்வாகத்திடமிருந்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க 10 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.