ஹெலிகாப்டரை பழுது பார்த்த ராகுல் காந்தி: குவியும் பாராட்டு!

 

ஹெலிகாப்டரை பழுது பார்த்த ராகுல் காந்தி: குவியும் பாராட்டு!

ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை  சரி பார்க்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில்  வைரலாகி வருகிறது. 

ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் ஏற்பட்ட பழுதை  சரி பார்க்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மக்களவை தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு  இமாச்சல் பிரதேசத்தில்  உள்ள 3 மக்களவை தொகுதிகளுக்கு நாளை  நடைபெற உள்ளது. இதனால் தேர்தல்  பிரசாரத்தில்  காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள்  தீவிரம் காட்டி வருகின்றனர். 

rahul

இந்நிலையில்  இமாச்சல்   பிரதேசத்தில் பரப்புரை மேற்கொள்ள ராகுல் காந்தி சென்றார். அப்போது அவரது ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தனது பாதுகாப்பு  குழுவினருடன் இணைந்து ராகுல் காந்தியும் சரி செய்துள்ளார். 

 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘சிறிய பழுதுதான். அனைவரும் கூட்டாக இணைந்து முயன்றததால் விரைவாக பழுது சரிசெய்யப்பட்டது. பயப்படும் அளவிற்கு எந்தவித சிக்கலும் ஏற்படவில்லை’ என்று  பதிவிட்டுள்ளார்.

rahul

இந்த புகைப்படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சியினர் மட்டுமில்லாது பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். எளிமையானவராக இருக்கிறார் ராகுல் என்றும் புகழ்ந்து வருகின்றனர்.