ஹீரோ! சிவகார்த்திகேயனை வாழ்த்திய சல்மான்கான்!!

 

ஹீரோ! சிவகார்த்திகேயனை வாழ்த்திய சல்மான்கான்!!

வரும் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஹீரோ படத்தின் புரோமோஷனில் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயனுடன் சல்மான்கானுடன் உரையாடுவது போன்ற வீடியோவை அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

வரும் 20 ஆம் தேதி வெளியாகவிருக்கும் ஹீரோ படத்தின் புரோமோஷனில் ஒரு பகுதியாக சிவகார்த்திகேயனுடன் சல்மான்கானுடன் உரையாடுவது போன்ற வீடியோவை அந்நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள  புதிய படத்திற்கு, ‘ஹீரோ’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள  இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்துள்ளனர்.  யுவன் ஷங்கர்  ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் வரும் 20 ஆம் தேதி படம் திரைக்குவரவுள்ளது. 

 

 

இந்நிலையில் தபங் 3 படத்தின் புரொமோஷனுக்காக வந்த சல்மான் கான் நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து வாழ்த்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சல்மான் கான் மீட்ஸ் சிவகார்த்திகேயன் என்பதை சுருக்கமாக எஸ்.கே மீட்ஸ் எஸ்.கே என கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இரு நடிகர்களும் பேசிக்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், சல்மான் கானுக்கு சிவகார்த்திகேயன் நன்றி தெரிவிக்கிறார். தபங் 3 வெற்றிப்பெற வேண்டும் என சிவகார்த்திகேயனும், ஹீரோ வெற்றிப்பெற வேண்டும் என சல்மான்கானும் வாழ்த்து தெரிவிக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.