ஹீரோ கதைத் திருட்டு: எழுத்தாளர் சங்கத்திற்கு இயக்குநர் மித்ரன் கடிதம்!

 

ஹீரோ கதைத் திருட்டு: எழுத்தாளர் சங்கத்திற்கு இயக்குநர் மித்ரன் கடிதம்!

இயக்குநர் போஸ்கோ பிரபு பிரச்னையை கிளப்ப விஷயம் சிவகார்த்தி காதுக்கு சென்றுள்ளது. பிரச்னையை முடியுங்கள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள  இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்திருந்தனர்.   யுவன் ஷங்கர்  ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹீரோ படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு பிரச்னையை கிளப்ப விஷயம் சிவகார்த்தி காதுக்கு சென்றுள்ளது. பிரச்னையை முடியுங்கள் என மித்ரனிடம் சிவகார்த்திகேயன் கறாராக சொல்ல, அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், பிரச்னையை முடித்துவிட்டேன் என சில நண்பர்களின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு தெரியும் படி விஷயத்தை பரப்பியுள்ளார் இயக்குநர் மித்ரன்.  இதை தொடர்ந்து திரைப்படமும் கடந்த வாரம் வெளியானது.

ttn

இதனிடையே உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு  தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை நாடியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ் எழுதியுள்ள கடிதத்தில்,  டைரக்டர் மித்ரன் ஹீரோ கதையும் போஸ்கோ பிரபு கதையும் ஒன்றுதான் என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ttn

இந்நிலையில் இதுகுறித்து  மித்ரன், பாக்யராஜூக்கு விளக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘கடந்த 7. 12. 2019 சனிக்கிழமை அன்று தங்கள் அழைப்பின் பெயரில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அலுவலகத்தில் அதன் தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற சமரச கூட்டத்தில் நானும் என்னுடன் ஹீரோ படத்தின் தயாரிப்பாளர் திரு கோட்டபாடி ஜெ ராஜேஷ் மற்றும் இந்த படத்தின் எழுத்தாளர்கள் திருவாளர்கள் சபரி முத்துவும் ஆண்டனி பாக்யராஜின் கலந்து கொண்டோம். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக திருவாளர்கள் யுரேகா மற்றும் மதுரை தங்கம் ஆகியோரும் நம் சங்கத்தில் ஹீரோ கதை சம்பந்தமாக புகார் அளித்த திரு போஸ்கோ பிரபுவும் வருகை புரிந்தார்கள்.

ttn

பெப்சி தலைவர் முன்னிலையில் நடந்த ஆலோசனையின் முடிவில் இந்த பிரச்னையில் ஏற்கனவே இதுவரை சம்பந்தப்படாத ஒரு நடுநிலையாளர் கொண்டு பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவரின் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ஒரு முடிவிற்கு வரவேண்டும் என்று அங்கு இருந்த அனைவரும் ஏகமனதாக முடிவு எடுத்தோம் .அதன் அடிப்படையில் நடுநிலையாளர்கள் கொண்ட ஒரு குழுவை தயவுசெய்து விரைவில் அமைத்து என்னுடைய மற்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் திரு கோட்டபாடி ஜெ ராஜேஷ்  மற்றும் புகார்தாரர் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவரின் கதைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து இந்தப் பிரச்னையை ஒரு முடிவிற்கு கொண்டு வரும்படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ttn

 

மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘ நான் பத்திரிக்கை செய்திகள் இருந்து தான்  என் கதையின் கருவை எடுத்து இந்த கதையை உருவாக்கினேன். மேலும் கதை உருவான சிறுசிறு வளர்ச்சி கட்டங்களுக்கு மற்ற பதிவுகளையும் ஆவணங்கள் ஆடியோ பைல் வைத்திருக்கிறேன். நான் என் கதையும் சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். ஒத்த சிந்தனையை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள். இது இனிவரும் காலங்களில் எப்படி கதை திரைக்கதை எழுதி என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவர் எனக்கு முன்பே அவர் கதையை பதிவு செய்து வைத்திருப்பதால் நான் அவர்  சிந்தனையிலிருந்து கதையை எடுத்துள்ளேன் என்ற முடிவுக்கு வந்துவிட்டீர்களா ?அப்படி இல்லை என்றால் நான் பலமுறை தங்களிடம் வலியுறுத்தி கொண்ட பிறகும் ஏன் தங்கள் பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவரின் கதையும் ஒப்பிட்டுப் பார்க்க மறுக்கிறீர்கள்.

tt n

மேலும் நான் என்னுடைய திரைக்கதையே செம்மைப்படுத்த 3 திரை எழுத்தாளர்களை இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளேன். அவர்களுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுக்கு நல்ல சம்பளத்தையும் பெற்றுத் தந்திருக்கிறேன் அவர்களுக்கு இந்தத் திரைக்கதையில் பெரும் பங்கு இருக்கிறது அவர்களின்  எழுத்தையும் எழுத்தாளர்களையும் என்றுமே நான் மதிப்பவன் என்று போதிலும் என் கதைக்கு சிறிதும் சம்பந்தப்படாத ஒருவருக்கு நான் ஏன் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.ஒன்றரை ஆண்டுகளாக உழைத்த எங்கள் குழுவின் உழைப்பை உதாசீனப்படுத்துவது தான் சங்கத்தின் நிலைப்பாடா? முடிவாக பதிவு செய்யப்பட்ட இரு  கதையையும்,  புகார் கொடுத்த நபரின் பதிவுசெய்யப்பட்ட கதையும் எங்கள் இருவரின் முன்னிலையில் ஒப்பிட்டுப் பார்த்து இருவருடைய கதையும் ஒன்றாகவே இருக்கிறதா என ஆராய்ந்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

ttn

இந்த கடிதத்தின் மூலம் நான் தங்களை மீண்டும் பணிவன்புடன் கேட்டுக் கொள்வது தயவு செய்து பதிவு செய்யப்பட்ட இரு முழுதிரைக்கதைகளையும் முறையாக ஒப்பிட்டு பார்க்க முடிவு எடுக்கவும் என்பதே… தங்கள் பதிவு செய்யப்பட்ட எங்கள் இருவர் கதைகளையும் ஒப்பிட்டு பார்க்கும் நாளை நான் படப்பிடிப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் காரணத்தால் தகுந்த கால அவகாசம் கொடுத்து முன்கூட்டியே அறிவித்தால் நான் வருவதற்கு ஏதுவாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.