ஹிருத்திக் ரோஷன் ரசிகையாக இருக்கக் கூடாது… மனைவியை கொலை செய்த கணவன்!

 

ஹிருத்திக் ரோஷன் ரசிகையாக இருக்கக் கூடாது… மனைவியை கொலை செய்த கணவன்!

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாய் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டது அமொிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்தவர் தினேஷ் புதிதத். இவரது மனைவி டோனி தோஜாய். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது

பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் தீவிர ரசிகையாய் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் தானும் தற்கொலை செய்துகொண்டது அமொிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் வசித்து வந்தவர் தினேஷ் புதிதத். இவரது மனைவி டோனி தோஜாய். இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது.  டோனிக்கு பாலிவுட் நடிகர் ஹிருத்திக்ரோஷன் என்றால் உயிர்… அதுவே அவரது உயிரை வாங்கிவிட்டது.

couple

வீட்டில் எப்போதும் ஹிருத்திக் ரோஷன் படம், பாடலை கேட்பது என்று இருந்துள்ளார்.  தினேஷுக்கு ஹிருத்திக் ரோஷன் மீது வெறுப்பு வரும் அளவுக்கு டோனிக்கு ஹிருத்திக் ரோஷன் மீது காதல் இருந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன் படங்கள், பாடல்கள் பார்ப்பதை நிறுத்தாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டும் அளவுக்கு தினேஷ் சென்றுள்ளார். ஆனால், டோனிக்கு ஹிருத்திக் ரோஷனை தவிர்க்க முடியவில்லை.
பிரச்னை பெரிதாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இவரும் தனித்தனியே வசித்துவந்துள்ளனர். 
சம்பவத்தன்று காலைதான் மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் தினேஷ். டோனியும் கூட கணவன் இருக்கும்போது ஹிருத்திக் ரோஷன் படம் பார்ப்பது இல்லை, பாடல்களை கேட்பது இல்லை என்று முடிவு செய்திருந்தாராம். ஆனால் என்ன நடந்தது என்று தெரியவில்லைல, தினேஷ் மனைவியை குத்தி கொலை செய்துள்ளார்.

hirthik

கொலை செய்த பிறகுதான் அவருக்கு நடந்தது புரிந்தது. டோனியின் தோழிக்கு நடந்த சம்பவம் பற்றி தகவல் அனுப்பியுள்ளார் தினேஷ். அதன் பிறகு வீட்டுக்கு வெளியே இருந்த மரத்தில் தூக்குப் போட்டு தினேஷும் தன்னுடைய உயிரை விட்டுள்ளார்.
திரைப்பட நடிகர் மீதான அதீத விருப்பம் ஒரு கொலை, ஒரு தற்கொலையில் முடிந்துள்ளது. இது குறித்து டோனியின் நண்பர் கூறுகையில், “டோனியை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தினேஷ் முயற்சித்தார். இதுவே இந்த விபரீதம் நிகழ காரணமாகிவிட்டது” என்றார்.