‘ஹியூமர் சென்ஸ்க்கு அளவே இல்லாமப்போச்சு’…கொலைக்குற்றச்சாட்டு குறித்து பார்த்திபன் எகத்தாளம்…

 

‘ஹியூமர் சென்ஸ்க்கு அளவே இல்லாமப்போச்சு’…கொலைக்குற்றச்சாட்டு குறித்து பார்த்திபன் எகத்தாளம்…

உதவியாளராக வேலை பார்த்த ஜெயங்கொண்டான் மீது நேற்று பார்த்திபன் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.

தன்னால் திருட்டுக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீடியாக்கள் தரும் முக்கியத்துவத்தால் அடுத்த நாளே ’கவிஞராக’ காட்சி அளிக்கிறார். உங்க காமெடி சென்ஸ்க்கு அளவே இல்லாமப்போச்சி’என்று படு எகத்தாளமாக சற்றுமுன் ட்விட்டியிருக்கிறார் நடிகர்,இயக்குநர் பார்த்திபன்.

parthiban

தனது திருவான்மியூர் அலுவலகத்தில் நடந்த திருட்டு தொடர்பாக ‘கவிஞர் கிச்சன்’ உணவக உரிமையாளரும் தன்னிடம் சில மாதங்கள் உதவியாளராக வேலை பார்த்த ஜெயங்கொண்டான் மீது நேற்று பார்த்திபன் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கு பதிலடி கொடுக்க நினைத்த ஜெயங்கொண்டான் இன்று அதே கமிஷனர் அலுவலகத்தில் பார்த்திபன் தன்னை மாடியிலிருந்து தள்ளிக் கொல்ல முயன்றதாக புகார் கொடுத்திருந்தார்.

ஜெயங்கொண்டானின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஊடகங்கள் அவர் ஒரு டுபாக்கூர் கவிஞர் என்பது கூடத்தெரியாமல் அவரை வைரமுத்து, நா.முத்துக்குமார் ரேஞ்சுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன.

parthiban tweet

அச்செய்திகளைப் படித்த பார்த்திபன் சற்றுமுன்னர் எழுதிய ட்விட்டர் பதிவில்,…R.Parthiban
‏’பார்த்திபன் கொலை செய்ய முயற்சி’ Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.மகிழ்ச்சி! என்று பதிவிட்டிருக்கிறார்.