ஹானர் 8X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

 

ஹானர் 8X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ஹானர் 8X ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

டெல்லி: ஹானர் 8X ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஹூவாய் துணை பிரான்டான ஹானர், ஏற்கனவே விற்பனை செய்து வரும் ஹானர் 7X ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஹானர் 8X ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஹானர் 8X ஸ்மார்ட்போன், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.18,999 எனவும், 6 ஜி.பி.ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.16,999 எனவும், 4 ஜி.பி.ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை ரூ.14,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை வருகிற 24-ம் தேதி அமேசான் ஆன்லைன் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக வரவுள்ளது.

ஹானர் 8X சிறப்பம்சங்கள்:

**6.5 இன்ச் 1080×2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

**கிரின் 710 சிப்செட், 12nm பிராசஸர்

**மாலி-G51 MP4 GPU

**128 ஜி.பி. இன்டர்னல் மெமரி

**மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

**20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8

**2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா

**16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

**ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2

**டூயல் சிம் ஸ்லாட்

**கைரேகை சென்சார்

**டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

**3750 எம்.ஏ.ஹெச். பேட்டரி